Skip to content
Home » திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Senthil

திருவெறும்பூர் அருகே பூட்டிய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரப்பட்டறை ஊழியர்உடலை அழுகிய நிலையில் திருவெறும்பூர் போலீசார் மீட்டுள்ளனர்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை உள்ளது.அதில் திருக்காட்டுபள்ளியை சேர்ந்த சேகர் (58) என்பவர் வேலை செய்து வந்தார். அவர்  அந்த பகுதியில்  ஒரு வாடகை கட்டிடத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.

கடந்த 12ம் வேலைக்கு சென்று விட்டு அறைக்கு வந்துள்ளார்.அதன் பிறகு சேகரை யாரும் பார்க்கவில்லை.நேற்று சேகர் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது இது சம்பந்தமாக உடனடியாக திருவெறும்பூர் போலீசாருக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்து உள்ளனர்.

திருவெறும்பூர் போலீசார் சேகர் தங்கி இருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சேகர் துண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

சேகரின் உடல் அழுகிய நிலையில்  காணப்பட்டது.  திருவெறும்பூர் போலீசார் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சேகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. அவர் ஏன் தற்கொலை செய்தார் என  தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!