Skip to content
Home » தீவிரவாதம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது…. திருச்சியில் மத்திய அமைச்சர் ஷோபா பேட்டி

தீவிரவாதம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது…. திருச்சியில் மத்திய அமைச்சர் ஷோபா பேட்டி

  • by Authour

திருச்சி  அடுத்த  திருச்செந்துறை சந்திரசேகர மவுலீஸ்வரர் கோயிலில் மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று தரிசனம் செய்தார். பின்னர், அவர் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

குறிப்பாக, திருச்சி திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி கோயில் 1,300 ஆண்டுகளுக்கு முன் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. ஆனால், இந்தக் கோயில் உட்பட சுற்றியுள்ள இடங்களை வக்ஃபுக்கு சொந்தம் என்று கூறி, நோட்டீஸ் வழங்க அழுத்தம் கொடுக்கிறார்கள். திருச்செந்துறையில் உள்ள 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபோல பல இடங்களில் நடைபெறுகிறது. உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் இவ்வாறு நோட்டீஸ் கொடுப்பது  நில பயங்கரவாதம்.

ராமேசுவரம் கபே வெடிகுண்டு சம்பவத்தில் தமிழர்கள் குற்றவாளிகள் என்று நான் சொல்லவில்லை. குற்றவாளிகள் பாகிஸ்தானில் இருந்து தமிழகம் வந்து பயிற்சி பெற்று, இங்கிருந்து பெங்களூர் வந்து குண்டு வைத்திருக்கிறார்கள் என்று தான் சொன்னேன். ஆனால், நான் தமிழர்களை பயங்கரவாதிகள் என்று கூறியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால், நான் மன்னிப்பு கேட்டேன். எல்லா மாநிலங்களிலும் தீவிரவாதம் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *