திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தெய்வானை. கோவில் அருகே கட்டப்பட்டிருந்தது. இன்று மதியம் வழக்கம் போல சிசுபாலன் என்ற பக்தர் யானை தெய்வானையிடம் ஆசீர்வாதம் வாங்க பழம் கொடுத்தார். அப்போது அந்த யானை பக்தரை தூக்கி போட்டு மிதித்தது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பபட்டது. சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். யானையின் இந்த ஆக்ரோஷத்தை பார்த்த பாகன்உதயா யானையை அடக்க முயன்றார். அப்போது பாகன் உதயாவையும் யானை தூக்கி போட்டு மிதித்தது. இதில் பாகன் உதயாவும் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயாவும் பரிதாபமாக இறந்தார். இந்த காட்சியை பார்த்த பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர். யானைக்கு மதம் பிடித்து விட்டதாக தெரிகிறது. அங்கு மருத்துவர்களும், போலீசாரும், வனத்துறையினரும் வரவழைக்கப்பட்டனர்.