Skip to content
Home » திருச்சி ஆட்டோ டிரைவர் சாவில் திடீர் திருப்பம்….. கள்ளக்காதலி உள்பட3 பேர் கைது

திருச்சி ஆட்டோ டிரைவர் சாவில் திடீர் திருப்பம்….. கள்ளக்காதலி உள்பட3 பேர் கைது

  • by Authour

ஆட்டோ டிரைவர் மரணத்தில் திடீர் திருப்பம் வழக்கில் கள்ளக்காதலி வீட்டின் முன்பு தூக்கில் தொங்கினார் போலீஸ் விசாரணையில் அம்பலம்

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள ஆளவந்தான் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (43) இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து  ஓட்டி  வந்தார்.   நேற்று முன்தினம்  மாலை சவாரிக்கு சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததால் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் அவரை தேடிய நிலையில் சீரா தோப்பு அருகே சுதாகர் என்பவரது வீட்டின் முன்பு அவரது ஆட்டோக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது ஜாஃபர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் சிராதோப்பு பகுதியைச் சேர்ந்த மனோகரின் பள்ளி தோழியான சுதா (35) இவர் தனியார் பள்ளி வேனில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பழக்க வழக்கம் ஏற்பட்டது.

இதனால் இரு விட்டார்களும் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மனோகரனின் மனைவி விபத்தில் இறந்த நிலையில் சுதாவுடனான நட்பு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் சவாரி செல்வதாக கூறிவிட்டு சுதா வீட்டிற்கு சென்ற மனோகர் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுதா மனோகரை எங்கேயாவது சென்று செத்துப் போ என்று கூறியும் மேலும் கடுமையான வார்த்தைகளாலும் கடுமையாகதிட்டி உள்ளார்.

இதனால்  விரக்தி அடைந்த மனோகர் தனது கள்ளக் காதலி சுதாவின் சேலையை எடுத்துக் கொண்டு சென்று சுதாவின் வீட்டிற்கு முன்பு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது கள்ளக்காதலன் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுதா உடனடியாக தனது கணவர் சுதாகர் மற்றும் மாமனார் சுப்பிரமணி உதவியுடன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு சென்று சேலையை அறுத்து விட்டுள்ளானர். இதில் கீழே விழுந்த மனோகரன் உடல் பின்னந்தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மூவரும் சென்று மனோகரனின் உடலை ஆட்டோக்குள் வைத்துவிட்டு ஏதும் தெரியாது போல் வீட்டுக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் சுதா மற்றும் சுதாவின் கணவர் சுதாகர் மற்றும் மாமனார் சுப்பிரமணி ஆகியோரை காவல் நிலையம்  அழைத்து வந்து விசாரித்ததில் மேற்கண்ட தகவலை சுதா கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து மூவரையும் மனோகரனை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *