திருச்சி காஜாமலை அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது அசார்( 33) இவர் உடையான்பட்டி, மெய்யம்மை நகரில் உள்ள கட்டடத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது முகமது அசாருக்கு கட்டடத்தில் இருந்த 40 மீட்டர் பித்தளை ஒயர் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அசார் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்கிற செட்டியார் (30 ), மாதவன் (26, )ஜூட் பால்ராஜ் (19 )ஆகிய 3 பேரை ஒயர் திருடியதாக கைது செய்தனர்.
தொழிலாளி மயங்கி விழுந்து சாவு…
திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் காமராஜ் 45. இவரது மனைவி உமாதேவி 44. இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஒரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். நேற்று முன்தினம் காமராஜ் புதூரில் உள்ள தனது வீட்டில் திடீரென நெஞ்சுவலி வந்து மயங்கினார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவசர சிகிச்சை உதவியாளர்கள் அவரை பரிசோதனை செய்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இந்த தகவல் அவரது மனைவி உமாதேவிக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உமாதேவி அளித்த புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது..
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது ராம்ஜி நகர் மலையப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் 46 என்பவர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. அவரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதேபோல் ராம்ஜி நகர் மில் காலனி மயானம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே எடமலை பட்டிப்புதூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில் துவாக்குடி மலையைச் சேர்ந்த லோகேஷ் 23 என்பவர் கஞ்சா விற்றது தெரிவந்தது அவரை போலீசார் கைது செய்தனர், இதேபோல் பெரிய கடை வீதி அருகே கஞ்சா விற்ற கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை 38 என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.