ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம். இங்கிருந்து படகில் இலங்கை சென்று விடலாம். இந்த பகுதியில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி கடத்தல் நடைபெறும் என்பதால் மத்திய வருவாய் புலனாய்வு படையினர் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை போட்டபோது அவர்களிடம் 4.5 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த 2 பேரையும் கைது செய்தனர். அது கடத்தி வரப்பட்ட தங்கம் என தெரிகிறது. இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா என அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.