தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துக்களை கூறினார். அதற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதும் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டில் 6 இடங்களில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் போலீசார்தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்த கஸ்தூரி தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியான நிலையில், போலீசார், கஸ்தூரியை ஐதராபாத்தில் கைது செய்தனர். அங்கு அவர் ஒரு படத் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருந்தார். அவரை கைது செய்த போலீசார் சென்னை கொண்டு வந்து அவரை சென்னை அமர்வு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கஸ்தூரியை 29ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் அவரை புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கறிஞர் பிரபாகரன் கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க கோரி, சென்னை எழும்பூர் கோாட்டில் மனு தாக்கல் செய்தார்.