மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் வந்தது. பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் தனது உடைமையில் மறைத்து ரூ.3.46 லட்சம் மதிப்புள்ள 34 ஆயிரம் சிக ரெட்டுகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இச்சம்பவத்தில் ஈடுபட்டவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.