Skip to content
Home » கள்ளிக்குடி மார்க்கெட்டை பள்ளிக்கூடமாக மாற்றுங்கள்…. வணிகர்கள் கூறுகிறார்கள்

கள்ளிக்குடி மார்க்கெட்டை பள்ளிக்கூடமாக மாற்றுங்கள்…. வணிகர்கள் கூறுகிறார்கள்

  • by Authour

திருச்சி  மணிகண்டம் ஒன்றியம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் துவக்க விழா திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் அருகே உள்ள ஆலம்பட்டி ரோடு பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத்தின் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார், மேலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தை துவக்கி வைத்தும் அலுவலகத்தை திறந்து வைத்தும் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தியும்  பேசினார்,

பின்னர் கோவிந்தராஜூலு நிருபர்களிடம் கூறியதாவது:

திருச்சி/ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நாள் கோரிக்கையான ரூ.77 கோடி ரூபாய் செலவில் 2017ல் கட்டப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட்டை இந்தப் பகுதி வளர்ச்சிக்காக மேல்நிலைப்பள்ளி அல்லது சுகாதார நிலையமாக மாற்ற வேண்டுமென அமைச்சர்கள் மற்றும் தமிழக முதல்வரிடம் நேரில் வலியுறுத்த உள்ளோம்.

மேலும் இந்த பகுதி வளர்ச்சிக்காக வளர்ச்சித் திட்டங்களை அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும், வணிகர்களுக்கு உள்ள சில பிரச்சனைகளில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பிரச்சனைகளை அரசு ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் , மேலும் தமிழக முதல்வரை சென்ற வாரம் மாநிலத் தலைவர் விக்ரமராஜா அவர்களுடன் சென்று சந்தித்து வணிகர்களின் பல்வேறு பிரச்சனைகளை எடுத்து கூறியுள்ளோம்.

வணிகர்கள் எந்த வியாபாரம் செய்தாலும் மூன்றாண்டுக்கு ஒரு முறை மட்டும் லைசன்ஸ் எடுத்தால் போதும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம் அதனை
ஏற்று எங்கள் கோரிக்கை ஏற்று அறிவிப்பு வெளியாக உள்ளது. அதனை தமிழக முதலமைச்சர் அறிவித்த பிறகு அவர்களுக்கு திருச்சியில் பாராட்டு விழா நடத்த உள்ளோம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இருந்து வணிகர்களை அழைத்து ஆடு மாடு போல் அடைத்து காலை முதல் காக்க வைத்து வெறும் 100 பேருக்கு மட்டும் தீர்வை ஏற்படுத்தி அனுப்பியுள்ளனர்,இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன் மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அவர்களிடமும் புகார் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *