கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வால்பாறை டவுன் பகுதியை ஒட்டியுள்ள கக்கன் காலனி பகுதியில் யானை சிறுத்தை கரடி உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரங்களில் உலா வருவது வழக்கம் ஆனால் இரண்டு சிறுத்தைகள் உலா வந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். மேலும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்கு உலா வர வண்ணம் வனத்துறை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.