திருச்சி , ஜீயபுரத்தை அடுத்த முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் காந்தி நகரை சேர்ந்தவர் கணபதி. ஆட்டோ டிரைவர் இவரது மகன் மதிர்விஷ்ணு (19). இவர் முசிறியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை மதிர் விஷ்ணு கொடியாலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு பஸ்சில் ஏறி திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பஸ் திண்டுக்கல் பஸ் நிறுத்தம் வந்ததும் அங்கு நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். பஸ்சை பின் தொடர்ந்து டூவீலர்களில் வந்த 4 பேர் முகத்தை துணியால் மூடி வந்து பஸ்சில் ஏறி மதிர்விஷ்ணுவை அடித்து உதைத்து கீழே தள்ளிவிட்டார். பின்னர் 4 பேர் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அறிவாலால் அவரை சாரமாரியாகவெட்டி படுகொலை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இச்சம்பவத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மதிர்விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொடியாலம் பகுதியைச் சேர்ந்த பொன்னர் மகன் கோகுல் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மதிர்விஷ்ணு தொடர்புள்ளது. இதனால் பழிக்கு பழியாக இக்கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்தது. கோகுல் கொலை வழக்கிலும் கோவில் சுவரில் வெடிகுண்டு வீசிய வழக்கிலும் மதிர் விஷ்ணு கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார் என்று தெரியவந்தது . இச்சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்பட அமைத்து தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டம் கொடியாலம் கிராம பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்கள் மற்றும் ஆகாஷ் ( 23), மணிமாறன் ( 22) ஆகிய 5 பேர் மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில்சரண் அடைந்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கொலையாளிகளிடம் போலீசார் விசாரணை செய்ததில் இக்கொலை பழிக்கு பழியாக நடந்ததாக தெரிவித்தார்க்ள. இந்நிலையில் தனிப்படை போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.