தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் அரிசி கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 18 லட்சம் குடும்பத்தினர் இந்த பொங்கல் தொகுப்பு பெற தகுதி உடையவர்கள்.
இவர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் பொங்கல் தினத்திற்கு முதல்நாள் வரை ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்பத்தினர் இந்த பொங்கல் தொகுப்பை பெறவில்லை. இதனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் ரூ. 43 கோடியே96 லட்சத்து, 69ஆயிரம் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது.