தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது X-தளத்தில் பதிவிட்டுள்ளதாவது… புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன்’ என பல திட்டங்கள் தந்த மாணவச் செல்வங்களின் தாயுமானவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், தமிழ் இளைஞர்களின் நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் ஆசிகளுடன், கரூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில், தடகளம், வாலிபால், பேஸ்கட்பால், கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், பழுதூக்குதல், சிலம்பம், கோ-கோ உள்ளிட்ட 21 வகையான போட்டிகள், மாவட்ட அளவில், பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள், அரசு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், பொது பிரிவினர் என ஐந்து பிரிவின் கீழ் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் 8,672 நபர்கள் இப்போட்டிகளில், மாவட்ட அளவில் கலந்து கொண்டார்கள். இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா 3000, 2000 & 1000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மேலும் கரூர் மாவட்டத்திலிருந்து மாநில அளவிலான போட்டிகளில் 706 மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர். இதில் ஜூடோ விளையாட்டுப் போட்டியில் முதல் இடம் பிடித்த செல்வன் ஆர்.ஆண்டனி லட்சன், செல்வன் சி.ரகுபதி மற்றும் செல்வி எஸ். சகானா ஆகியோர் தங்கப்பதக்கம் மற்றும் தலா ஒரு லட்சம் பரிசு பெற்றனர். மாநில அளவில் முதலமைச்சர் கோப்பையில், ஜூடோ விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற, செல்வி எஸ்.மகாலட்சுமி, செல்வி எ.அனுக்ஷா மற்றும் டென்னிஸ் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற, செல்வன் வி.திருமுருகன் ஆகியோர் வெள்ளி பதக்கம் மற்றும் தலா 75 ஆயிரம் பரிசும் பெற்றனர். மாநில அளவில் அமைச்சர் கோப்பையில், ஜூடோ விளையாட்டுப் போட்டியில், மூன்றாவது இடம் பெற்ற செல்வி எ.காவியா, செல்வன் எஸ்.பிரதிஸ், செல்வி ஸ்ரீ தீபனா, செல்வி ஜி.அபிதா ஸ்ரீ, செல்வன் எஸ் கவின்குமார், செல்வி எம்.பிதிபா, செல்வன் டி.எல்.லோகேஷ்ராம், செல்வன் எஸ்.ராம்குமார், செல்வி பி.தர்ஷினி ஆகியோர் வெண்கல பதக்கமும் மற்றும் தலா ரூபா 50,000 பரிசும் பெற்றனர். பரிசுகள் பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. கரூர் மாவட்டத்தில் 15 மாணவ மாணவிகள் மொத்தம் ரூ 9,75,000/- பரிசு பெற்று கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் மாநில அளவில் கரூர் மாவட்டம் 22-ம் இடத்தை பிடித்துள்ளதுஎன இவ்வாறு தெரிவித்தார்.