கோவையில் பல்வேறு இடங்களில் இணையவழி, இணைப்புகளின் பேட்டரிகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து உள்ளது. குறிப்பாக கோவை, இராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக அளவில் பேட்டரிகள் திருட்டு போவதாக வந்த புகார்களை தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி கோவை இராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் கோவை பட்டிணத்தை சேர்ந்த வினோத்கண்ணன் என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் வினோத்கண்ணன் “ஜியோ பைபர் நெட்” நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரியவந்து உள்ளது. அந்த நிறுவனத்தின் சீறுடை பனியனை அணிந்து கொண்டு அடுக்குமாடி குடியிருபுகளை குறி வைத்து. சந்தேகம் ஏற்படாத வண்ணம் இணைவழி இணைப்புகளை சோதனை செவதாக கூறி மொட்டை மாடியில் பொருத்தப்பட்டு இருந்த பேட்டரிகளை திருடி வந்தது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் வினோத்கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.