விஜய்யை போல் நானும் உட்சபட்ச நடிகரா இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தேன் என நடிகர் சரத்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், “விஜய்யை போல் நானும் உட்சபட்ச நடிகரா இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தேன்.. 2 மாபெரும் தலைவர்களை எதிர்த்து நின்னேன். பொறுப்புடன் இருக்க வேண்டுமென் பாஜகவில் இணைந்தேன். பொறுப்பு எதிர்பார்த்து இணையவில்லை. விஜய் அரசியலுக்கு வந்தது வரவேற்கதக்கது. ஆனால் யாரும் சொல்லாத விசயத்தை விஜய் அழுத்தமாக சொல்ல வேண்டும். தேசிய மொழியாக இந்தி இல்லாவிட்டாலும், அதிகமாக பேசப்படும் மொழி இந்தி, ‘இந்தி தெரியாது போடா’ என சொல்பவர்களுக்கு நான் கூறுவது ‘இந்தி கத்துக்கோ வாடா’…
பொது வாழ்க்கை , மக்கள் சேவை என வந்து விட்டால் கல்லடி பட தான் செய்யும், அவருக்கு கல்லடி படத்தான் செய்யும். அடுத்தாண்டு ஜூலைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலையோடு சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்துவிட்டேன். பாஜக தமிழ்நாட்டில் வெற்றி பெற உண்மையாக உழைக்க களத்தில் இறங்க உள்ளேன்” என தெரிவித்தார்.