புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் எட்டாம் மண்டகப்படி என்ற இடத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய செயலாளர் ஆர்.வி.ராமையா தலைமையில்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. இவர்கள்ஒன்றிய வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களான அரிமழம்,கடியாபட்டி,ராயவரம் ,ஏம்பல்,கீழாநிலைப்புதுப்பட்டி ஆகிய ஐந்து மையங்களில் டாக்டர்முத்துலெட்சுமிரெட்டி கர்ப்பிணி பெண்கள்மகப்பேறு திட்டத்தில் மகப்பேறுமருத்துவநிதி வழங்குவதில் ரூபாய் 20லட்சத்திற்குமேல் முறைகேடு நடைபெற்றுள்ளதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்செய்தனர்
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சங்கர் ,மற்றும் எம். அடைக்கப்பன்,,
எ. மணி ,எம் .மாயாண்டி, பி .ஆவுடைமுத்து,
ஆர். கதிர்வேல் ,ஆர் .பாண்டியன் ,கே. கருப்பையா,கே .லட்சுமணன், பி. மாணிக்கம் ,
எம் .பெருமாள் ,சி. சங்கரன் ,பி .காசிநாதன், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்