புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக தேர்வு கூடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை, சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா , மேயர் .திலகவதி செந்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் அவர்கள், புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் .எம்.லியாகத் அலி, முதன்மைக் கல்வி அலுவலர் .கூ.சண்முகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.