திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள் ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில்
சமீபத்தில் இணையதளம் வாயிலாக ஆபாசமான படங்களை அனுப்பியது, பல்வேறு யுத்திகளை கையாண்டு இணையதளம் வாயிலாகவே மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் சீனாவை சேர்ந்த யுவான்லூன் (25), சில் ஷியோ யமாவ்(40) ஆகியோரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்தனர்.
திருச்சி சிறப்பு முகாமுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள்
4 பேர் நேற்று காலை வந்தனர். பின்னர் சிறப்பு முகாமுக்குள் சென்ற அவர்கள், சீனாவை சேர்ந்த 2 பேரையும் தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று அவர்களிடம்
துருவி துருவி விசாரணை நடத்தினர். தொடர்ந்து இருவர் மீதும்
3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் திருச்சி மாவட்ட கலெக்டர் பிர தீப்குமாரிடம் அனுமதி பெற்று விசாரணைக்காக சென்னை அழைத்து சென் றனர்.