திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி மகன் விஷ்ணு. இவர் இன்று காலை கொடியாலத்திலிருந்து அரசு பஸ்சில் ஏறி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றுள்ளார். அப்போது திண்டுக்கரை அருகே பஸ் வந்த போது பின்னால் டூவீலரில் வந்த 5 பேரி ஒருவர் பஸ்சில் ஏறி விஷ்ணுவை கீழே தள்ளியுள்ளார். உடனே 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் விஷ்ணு தலையில்
சரமாரி வெட்டிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர். சம்பவ இடத்தில் ரத்த வௌ்ளத்தில் பரிதாபமாக விஷ்ணு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜீயபுரம் போலீசார் விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பி சென்றவர்களை கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறியிருப்பதாவது… கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோகுல் என்ற நபரை விஷ்ணு தொடர்புடைய கும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர். இச்சம்பத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விஷ்ணு கடந்த வாரம்தான் ஜாமினில் வந்துள்ளார். இந்நிலையில் இவரை நோட்டமிட்ட கும்பல் இன்று பழிக்குப்பழியாக இக்கொலையை செய்திருக்கிறது. இருப்பினும் இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.