கோவையில் 14 லட்சம் மதிப்பு உள்ள போதை காளான், கஞ்சா,மற்றும் குட்கா, பறிமுதல் மேலும் 5 பேரை கைது செய்த போலிசார் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், மற்றும் பணம் எண்ணும் இயந்திரம், எடை தராசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கோவையில் நாளுக்கு நாள் போதை பொருட்களின் விற்பனையும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
இந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் பேரில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், தீனம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இன்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ஆன்லைன் மதிப்பு சுமார் 12,90,000/- மதிப்பு உள்ள 589 கிராம் எடை கொண்ட அதிக போதை தரக் கூடிய போதை காளான் (Albino Pinus Envy Pinus Envy Anesis Albino Chocolate Crinkle Brain) 1.050 கிலோ எடைகொண்ட ரூ. 40,000/- மதிப்பு உள்ள கஞ்சா,
சுமார் ரூ79,000/- மதிப்பு உள்ள 13 கிலோ குட்கா, ஆகியவை சோதனையில் சிக்கியது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 இரு சக்கர வாகனங்கள், 5 செல்போன்கள், பணம் எண்ணும் இயந்திரம்-1 மற்றும்
எடை போட பயன்படும் தராசு-1 ஆகியவற்றை போலீசார் சோதனையில் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் தீனம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் வீட்டை ரூ 8 ஆயிரம் வாடகைக்கு எடுத்து பி.என்.புதூரை சேர்ந்த அமரன், பெங்களூரை சேர்ந்த ஜனாதன், ஆலாந்துறையை சேர்ந்த பிரசாத், நரசீபுரத்தை சேர்ந்த சரவணகுமார், மற்றும் சாய்பாபா காலணியை சேர்ந்த நிஷாந்த் ஆகியோர் கஞ்சா, மற்றும் போதை காளான் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது. அதை அடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.