Skip to content
Home » கோவை விழாவின் ஒரு பகுதியாக டபுள் டக்கர் பேருந்து பயணம்…..

கோவை விழாவின் ஒரு பகுதியாக டபுள் டக்கர் பேருந்து பயணம்…..

கோவை விழாவின் 17-வது பதிப்பின் ஒரு பகுதியாக கோவை விழா அமைப்பாளர்கள் சார்பில் டபுள் டக்கர் பேருந்து பயணம் இன்று தொடங்கியது. இந்த பேருந்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வழக்கமாக எப்போதும் ஒரு பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டு

பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய எந்த கட்டணமும் இல்லை.இது டிசம்பர் 1 வரை நடைபெற உள்ளது.

வ.உ.சி பார்க் கேட்டில் இருந்து தொடங்கி காந்திபுரம் வழியாக லட்சுமிபுரம் வரை சென்று அங்கிருந்து திரும்பி மீண்டும் வஉசி பார்க் வந்தடையும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் கூறியிருப்பதற்கு இணங்க உக்கடம் லேக் வியூ உள்ளிட்ட பகுதிகளிலும் இயக்க ஆலோசிக்கப்படும் என கோவை விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

அதேபோல இந்த பேருந்தில் பயணம் செய்ய இணையதளத்தில் முன்பதிவு செய்தால் மட்டுமே பேருந்தில் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!