அரியலூர் மாவட்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜராஜன் இவர் சொந்த வேலையாக தனது காரில் த.பழூர் சென்று விட்டு மீண்டும் ஜமீன் குளத்தூர் கிராமத்திற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது செங்குந்தபுரம் மீனாம்பாடி ஏரி அருகே வந்தபோது காரில் இருந்து கருகும் வாடை வந்ததையடுத்து கீழே இறக்கி சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அதே நேரத்தில் காரின் பின்பக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 லட்சம் மதிப்பிலான கார் முழுவதும் எரிந்து நாசமானது. அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். செய்தி அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது. கருகும் வாடை வந்ததால் கீழே இறங்கிய கார் உரிமையாளரும் டிரைவருமான ராஜராஜன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கார் எரிந்து புகைமூட்டம் போல் ஆனதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
.