அரசுப் பள்ளிகளை மேம்படுத்திடும் வகையில் நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்திட தனியாரிடம் இருந்து நன்கொடைகள் பெற்று அரசு பள்ளிகளின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்படுத்திடும் நோக்கில் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கு பலர் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தலைவரும், முன்னாள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியருமான அப்பாவு இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது ஒருமாத சம்பளத்திற்கான காசோலையை, நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.