திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் அந்துவான்( 51).கூலி தொழிலாளி.இவர் கடந்த 11ந் தேதி ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ராஜேஷ் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் ஏற்கனவே ராஜேஷ் அரவிந்தன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.