புதுக்கோட்டை நகராட்சி வார்டு எண் 31 போஸ் நகர் பகுதியில் போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை என அந்த பகுதி மக்கள் நகராட்சி தலைவர் திலகவதி செந்திலிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு குடிநீர் தொட்டி கட்டி குடிநீர் வழங்க நகராட்சி தலைவர் உத்தரவிட்டார். அதன்படி குடிநீர் வழங்கல் நிதியில் ஆழ்குழாயுடன் கூடிய மின் மோட்டார் தொட்டி கட்டப்பட்டது. அது மக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி யின் சார்பில் துவங்கி வைக்கப்பட்டது.இதனை நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில்துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் எம் லியாக்கத் அலி, , நகராட்சி ஆணையர் நாகராஜன், நகராட்சி
பொறியாளர் சந்திரசேகரன்,நகர தி.மு.க.துணைச்செயலாளர் மணிவேலன்,
வட்டசெயலாளர் ஆனந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.