Skip to content
Home » திண்டுக்கல் ……பூசாரி தற்கொலை வழக்கு……ஓபிஎஸ் சகோதரர் விடுதலை

திண்டுக்கல் ……பூசாரி தற்கொலை வழக்கு……ஓபிஎஸ் சகோதரர் விடுதலை

திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்தவர்  நாகமுத்து .  முன்னாள்  முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர், ஓ.ராஜாவுடன் கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் பூசாரி நாகமுத்து தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் 2012 டிச.7-ம் தேதி பூசாரி நாகமுத்து தற்கொலை செய்துகொண்டார்.

பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக ஓ.ராஜா, பாண்டி, மணிமாறன் உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி 2015 முதல் வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பாண்டி இறந்துவிட்டார். இந்த நிலையில் இன்று  திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில்  தீாப்பு வழங்கப்பட்டது. அதில்   ஓ. ராஜா  உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *