உரக்கச்சொல் செயலி மூலம் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற அதிரடி சோதனையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் கழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் “உரக்கச்சொல்” என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் Download செய்து தங்களுடைய சுய விபரங்களின்றி சமூக விரோத செயல்கள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றன.அவ்வாறு பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் நேற்று ஒரத்தநாடு உட்கோட்டம் வாட்டாதிக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நெய்வேலி தென்பாதி பகுதியில் அம்ஜித்கான் (42) என்பவரது கடையில் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக உரக்கச்சொல் செயலி மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் வாட்டாதிக்கோட்டை காவலர்கள் மேற்படி இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டதில் அவரிடமிருந்த ஹான்ஸ் 800 கிராம் மற்றும் கூல் லிப் 600 கிராம் போன்ற போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டு அம்ஜித்கான என்பவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேல்முருகன் கடைக்கு சீல் வைத்தார். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக வாட்டாதிக்கோட்டை காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.