தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளில் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியான செந்தமிழ் செல்வன்(30) என்பவரை கடந்த அக்.12-ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் திருவிடைமருதூர் பேரூராட்சி உறுப்பினர்.
இந்நிலையில் செந்தமிழ் செல்வன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருவிடைமருதூர் டிஎஸ்பி., ராஜு , மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், செந்தமிழ்செல்வனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.