திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ, மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ராமேஸ்வரம் – பனாரஸ் வாராந்திர விரைவு ரயில் (ரயில் எண் 22535) மற்றும்
ராமேஸ்வரம் – அயோத்தி கேன்ட் – ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் (ரயில் எண் 22613/14) ஆகிய இரண்டு ரயில்களும்,
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் .
இந்தக் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மேலாளரை அலைபேசியிலும் தொடர்பு கொண்டு திருச்சி எம்.பி துரை.வைகோ கோரிக்கை வைத்தார். அவரும் விரைந்து பரிசீலித்து ஆவன செய்வதாக பதிலளித்தார்.