குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு. குளித்தலை நகருக்குள் விரைந்து வருவதற்கு இருந்த பாதையை அடைத்ததால் வாலாந்தூர் பொதுமக்கள் அவதி. பள்ளி சீருடையுடன் மாணவ மாணவிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திர ஊராட்சி வாலாந்தூரை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அவசரகால பயன்பாட்டிற்காக குளித்தலை ரயில் நிலைய வழிப்பாதையினை பயன்படுத்தி வந்தனர்.
குளித்தலை நகருக்குள் வந்து செல்லவும் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வரவும் இந்த வழியினை பயன்படுத்தி வந்தனர்.
இந்த வழியை விட்டால் அவர்கள் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி வரவேண்டிய சூழ்நிலையில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் நடைமேடை இணை விரிவாக்கம் செய்த போது அவர்கள் பயன்படுத்தி வந்த வழியை தற்போது நிரந்தரமாக அடைத்துள்ளனர்.
தமிழின் அவசர கால பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வந்த இந்த வழியினை அடைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துனர்.
இந்நிலையில் இதுகுறித்து குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரயில்வே துறையினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுடன் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது பள்ளி சீருடை பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் அவசர கால பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்ட அந்த வலியினை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், அந்தப் பாதையை திறக்காவிட்டால் தாங்கள் நான்கு கிலோமீட்டர் சுற்றி வரும் நிலைமைக்கு இதனால் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வர முடியாது
எனக்கூறி குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொது மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் குகை வழி பாதை அமைத்து தரவும் பொதுமக்கள் கோரிக்கையை விடுத்திருந்த நிலையில் அது குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் தங்களது பகுதியில் நோயற்றவர்கள் கூட குளித்தலை மருத்துவமனையில் கொண்டு சேர்ந்து சேர்க்க தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் பல நேரங்களில் கூட உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே குகைவழி பாதையினை அமைத்து தர வேண்டும் எனவும் அப்ப ஊதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்