புதுடெல்லியில் இன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார். இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த, ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய
மனுவினை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். உடன் க.நந்தகுமார், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு மின்சார வாரியம், .விசு மகாஜன் இணை நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியோர் உடனிருந்தனர்.