நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கஸ்தூரி மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்த மக்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் திடீரென தலைமறைவான கஸ்தூரி ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. தன் மீது உள்நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கஸ்தூரி தரப்பில் கூறப்பட்டது.
அதே நேரத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கஸ்தூரியின் பேச்சை கோர்ட்டில் ஒளிரப்பி காட்டப்பட்டது. அத்துடன் கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. தெலுங்கு மக்கள் வந்தவர்கள் அல்ல, அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். என்று கூறிய நீதிபதி, அந்த பேச்சை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளது என்றும் நீதிபதி கேட்டார்.
கஸ்தூரியின் பேச்சு தெலுங்கு மக்களை மிகவும் காயப்படுத்தி உள்ளது அவர் திட்டமிட்டு இதுபோன்ற கருத்தை பேசி உள்ளார். மன்னிப்பு கேட்டவுடன் எல்லாம் சரியாகி விடாது. கஸ்தூரிக்க முன் ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. கஸ்தூரி மீது 6 வழக்குகள் பதிவாகி உள்ளது.
கஸ்தூரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.