திருச்சி மாவட்டம் லால்குடி தாளக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் முத்தையன் . கடந்த2023 ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் தண்டனை பெற்று முத்தையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் ..இது குறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி னார்.