திருச்சி மேலப்பஞ்சப்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ரேகா . இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது இவரது பணப்பையை ஒருவர் நைசாக திருடினார். அவரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு அந்த நபரை விசாரித்தனர். விசாரணையில் அவர் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த முகமது சலீம் (43) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து பணம் ,செல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.