Skip to content
Home » காதலுக்கு எதிர்ப்பு…. தந்தை-மகளை தாக்கிய 2 ரவுடிகள் கைது.. திருச்சியில் சம்பவம்..

காதலுக்கு எதிர்ப்பு…. தந்தை-மகளை தாக்கிய 2 ரவுடிகள் கைது.. திருச்சியில் சம்பவம்..

திருச்சி, எடப்பள்ளிப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ்(48). இவருக்கு காவியா, கோகிலா ஆகிய 2 மகள்கள் உள்ளனர் . காவியா ஆர்.எம்.எஸ் காலனி 5து தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வகுமார் ( 26 )என்பவரை காதலித்தார். இதை அறிந்த கனகராஜ் அதிர்ச்சியடைந்து மகளை அவர் கண்டித்தார். உடனே காவியா தனது காதலனிடம் இதுகுறித்து கூறியுள்ளார். தகவல் அறிந்து செல்வகுமார் தனது தாயாருடன் வந்து காவியாவை அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் செல்வகுமார் மற்றும் அவரது நண்பர் ரவுடி அந்தோணி (28 )ஆகிய 2 பேரும் கனகராஜ் வீட்டுக்கு சென்று கனகராஜிடம் தகராறு செய்துள்ளனர். இதில் கனகராஜின் பல்லை அடித்து நொறுக்கினர். அப்போது தந்தையை காப்பாற்ற வந்த அவரது இளைய மகள் கோகிலாவுக்கும் அடி விழுந்தது. இதில் அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தந்தை ,மகள் ஆகிய 2 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடிகளான செல்வகுமார் ,அந்தோணி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!