புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மெய்ய நாதன். இவரது மகன் முத்தமிழ் மாறன் (30). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். காதல் மனைவி பிரிந்த சோகத்தில் முத்தமிழ்மாறன் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த முத்தமிழ்மாறன் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் ரோட்டில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். அறையில் ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பெயரில் ஏர்போர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லா மேரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தமிழ் மாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் ?குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.