திருச்சி மாவட்டம் முசிறி அந்தரப் பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி அனுசுயா . இவர்களுக்கு சாய் விக்ரம் என்ற ஒரு மகனும், சிவானி என்கிற பெண் குழந்தையும் உள்ளனர். சிவானி பிறந்து 28 நாட்களே ஆகிறது. அனுசியா திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டையம் பேட்டையில் உள்ள தாய் வீட்டில் இருந்து உள்ளார். அங்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். பின்னர் குழந்தை தூங்கி உள்ளது. சிறிது நேரம் கழித்து பார்த்த போது எந்த அசைவும் இல்லாமல் குழந்தை இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக குழந்தையை திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து அவரது தந்தை செல்வக்குமார் திருவரங்கம் போலீசில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.