Skip to content
Home » ஒரே பெண்ணை அனுபவிக்க போட்டி போட்ட இரட்டையர்கள் கைது…

ஒரே பெண்ணை அனுபவிக்க போட்டி போட்ட இரட்டையர்கள் கைது…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே உள்ள சந்தக்குன்னு பகுதியை சேர்ந்தவர்கள் அசைனார் (21). உசேன் (21). இரட்டையர்களான இவர்கள் சரிவர வேலைக்கு எதுவும் செல்லாமல் சுற்றித்திரிந்துள்ளனர். அதேபோல் இளம்பெண்களிடம் மாஸ் காட்டி அவர்களை தங்களின் காதல் வலையில் வீழ்த்துவதில் இரட்டை சகோதரர்களுக்கிடையே நீயா…நானா… போட்டி போடுவார்களாம்.

பார்ப்பதற்கு இருவரும் ஒரே மாதிரி இருப்பதால் ஒருவருக்கொருவர் மாறி மாறி உதவி செய்து இளம்பெண்களை குழப்பிவிடுவார்களாம். இந்த நிலையில் சகோதரர்களின் பார்வை அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் மீது விழுந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் அசைனார் அந்த இளம்பெண்ணிடம் தனது காதல் வலையை வீசினார். ஆனால் அந்த பெண் முரண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் ஏதேதோ சினிமா வசனங்கள் பேசி அசத்திய அசைனார் இளம்பெண்ணை தனது வலையில் வீழ்த்திவிட்டார்.

சில நாட்களிலேயே இருவரும் நெருக்கமானார்கள். இதே இளம்பெண்ணுக்கு உசேனும் குறி வைத்தார். பார்க்க ஒரே மாதிரியும், ஒரே மாதிரியான நடத்தையும் இருந்ததால் உசேனுடனும் இளம்பெண் காதல் வலையில் சிக்கினார்.  ஒரே பெண்ணுக்கு இரட்டையர்கள் இருவரும் சேர்ந்து தினமும் இரவில் மாறி மாறி வீடியோ காலில் பேசுவது வழக்கம். அப்படித்தான் ஒருநாள் இளம்பெண்ணுக்கு வீடியோ கால் செய்த அசைனார், அந்த பெண்ணிடம் நாம் தான் திருமணம் செய்யப்போகிறோமே, வீடியோ காலில் ஆடை இல்லாமல் வர முடியுமா என்று கேட்டுள்ளார்.

காதல் மயக்கத்தில் இருந்த இளம்பெண் விபரீதத்தை உணராமல் அசைனார் முன் வீடியோ காலில் நிர்வாணமாக வந்துள்ளார். தந்திரமாக அதை பதிவு செய்துவிட்டார் அசைனார். பின்னர் அந்த வீடியோவை தனது சகோதரர் உசேனிடம் காண்பித்துள்ளார். இருவரும் வீடியோவை பார்த்து ரசித்த பிறகு அந்த இளம்பெண்ணை மிரட்ட தொடங்கினர். அந்த பெண்ணை அனுபவிக்க திட்டமிட்ட இருவரும் எங்களை நீ திருமணம் செய்யாவிட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்வோம் என்று மிரட்டியுள்ளனர்.

ஆனால் அந்த பெண் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணின் ஆபாச வீடியோக்களை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து எடக்கரை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் இரட்டையர்களான அசைனாரையும், உசேனையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர். விசாரணைக்குப் பின் போலீசார் இருவரையும் மஞ்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *