திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த தங்கராஜ் கோவை டாடாபாத் 8-வது வீதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார்.இவர் குறைந்த விலையில் தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி தனது நிறுவனத்தில் பணம் செலுத்தும்படி வாடிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
இதை நம்பி பலர் பல லட்சம் ரூபாய் பணத்தை கட்டியுள்ளனர்.ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு குறித்த நேரத்தில் வீட்டுமனை கிரயம் செய்து தராமல் காலதாமதம் ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த சரவணகுமார் மற்றும் பணம் கட்டியவர்கள் கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில் கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுசா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தார்.
அதை தொடர்ந்து தங்கராஜை கைது செய்து அவரின் சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.