உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடிகை வனிதா விஜயகுமார் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதல் முறையாக பெரிய கோயிலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு நான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் புதிய பரிமாணம் எடுத்துள்ளார். விஜய் பெரிய வெற்றி அடையனும். விஜயும் – உதயநிதியும் அரசியலில் எதிரி என்பது சரிதான். விஜய் – உதயநிதி இருவருமே எனக்கு நண்பர்கள். நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் ஆதரிப்பேன் என்றார்.