கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் நல்வாய்ப்பாக 30க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் (க்ரிஷ் என்ற) என்ற தனியார் பேருந்து கோவை செல்ல சேலம் மாவட்டம் சங்ககிரி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலியனூர் பகுதியில் இன்று காலை வந்து கொண்டிருந்தது.
அப் போது சாலையில் இரண்டு சக்கர வாகனம் ஒன்று வந்துவிட்டது . இந்த இரண்டு சக்கர வாகனத்தை 60 வயது முதியவர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். இந்த முதியவர் மீது பஸ் மோதாமல் இருக்க பேருந்து பஸ்சை சடன் பிரேக் போட்டுள்ளார். அப்போது பஸ் முதியவர் மீது மோதி சாலையில் அப்படியே கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் சிக்கிய முதியவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
தனியார் பஸ் கவிழ்ந்த சிறிது நேரத்தில் டீசல் டேங்கில் கசிவு ஏற்பட்டு இதில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. தீமள மளவென பஸ்முழுவதும் பரவத் தொடங்கியது. இதனை அறிந்த பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே குதித்து அதிர்ஷ்டமாக உயிர் தப்பினர். இந்த தீ விபத்தை அறிந்த சங்ககிரி டிஎஸ்பி ராஜா மற்றும் போலீசார் ,தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடம் விரைந்து வந்தனர் .இவர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனர்.