Skip to content
Home » கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் திருக்கல்யாணம்…. அரகர கோஷத்துடன் தரிசனம்…

கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் திருக்கல்யாணம்…. அரகர கோஷத்துடன் தரிசனம்…

  • by Senthil

கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் கோவில் அரகர அரகர கோஷத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கந்த சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் நேற்று இரவு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று அதன் தொடர்ச்சியாக இன்று பல்வேறு முருகன் ஆலயங்களில் வள்ளி தெய்வானை சுவாமி உடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கரூர் வெண்ணைமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று ஆலய மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் வள்ளி,

தெய்வானை சமேத பாலசுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்ற அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் திருமண கோலத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர்.

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மாப்பிள்ளை சீர்வரிசை நடைபெற்று தொடர்ந்து ஆலய மண்டபத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. பின்னர் வள்ளி, தெய்வானை மற்றும் பாலசுப்ரமணியசுவாமிகளுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்று தொடர்ச்சியாக சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

பின்னர் வள்ளி, தெய்வானை மற்றும் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால்பழம் கொடுக்கும் நிகழ்வு, தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்வும் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி முன்னிட்டு மொய் வைக்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

அதை தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் குறிப்பாக திருமணத்தடை குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பக்தர்களின் கோரிக்கை நிறைவேறுவதாக ஐதீகம் அதன்படி ஏராளமான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளுடைய ஜாதகத்தை திருக்கல்யாணம் வைத்து தரிசனம் செய்தனர். வழக்கத்தை விட கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய திருக்கல்யாண நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் அப்பகுதியில் நீண்ட நேர வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!