தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 246 உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கோட்டையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு, செந்தில் பாலாஜி, பொன்முடி, எ.வ. வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள், இன்று தலைமை செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 246 உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மதிப்பிற்குரிய திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்கள், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அண்ணன் க. பொன்முடி அவர்கள், மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் அண்ணன் எ.வ. வேலு அவர்கள் உடனிருந்தனர்.