ஜம்மு-காஷ்மீர் சட்டசபை நேற்று முன்தினம் கூடிய போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்துபா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் முன்தினம் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று கூடிய சட்டசபையில், என்ஜினீயர் ரஷீத்தின் சகோதர குர்ஷித் அகமது, சிறப்பு அந்தஸ்தை ஆதரித்து பதாகையை காண்பித்ததால் சட்டசபையில் எம்.எல்ஏ.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை மீண்டும் கூடிய சட்டசபை கூட்டத்தில் 3வது நாளாக 370வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்த கோரும் தீர்மானத்துக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிடிபி எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பியதால் சட்டசபையில்அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.