Skip to content
Home » வசதியான பெண்களை மயக்கி உல்லாசம்….. கரூர் டாக்டர் கைது…. பகீர் படங்கள்

வசதியான பெண்களை மயக்கி உல்லாசம்….. கரூர் டாக்டர் கைது…. பகீர் படங்கள்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட   பகுதியை சேர்ந்தவர்  டாக்டர் கோடீஸ்வரன்(30) இவரிடம் கரூர்  கிழக்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த சிந்தியா (36).  என்பவர் பழகி வந்தார்.  இவர்களுக்கு இடையே நட்பு  வளர்ந்த நிலையில்,  டாக்டர் கோடீஸ்வரன்,
சிந்தியாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும்  கூறி உள்ளார். மேலும், இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் வேண்டாமென்று சந்தியா மறுத்துள்ளார்.

ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை என்றும், உண்மையில் காதலிப்பதாக கூறி, டாக்டர்  கோடீஸ்வரன் சிந்தியாவை திருமணம் செய்து கொண்டார். கோவிலில் வைத்து தாலி கட்டி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்த விசயத்தை சிந்தியா பெற்றோரிடம் சொல்ல அவர்களும்  ஏற்றுக் கொண்டனர்.  டாக்டர்  கோடீஸ்வரனுக்கு சிந்தியாவின் பெற்றோர் 3 பவுனில் தங்க பிரேஸ்லெட், 1 பவுனில் தங்க மோதிரம் ஆகியவைகளை கொடுத்தனர்.

கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர். சிந்தியாவின் பெட்ரோல் பங்க் நிர்வாகம் மற்றும் வரவு செலவுகள் உட்பட அனைத்தையும் கோடீஸ்வரனே  கவனித்து வந்துள்ளார்.  திருமணம் நடைபெற்ற விவரத்தை  டாக்டரின் குடும்பத்தினரிடம் சொல்லுமாறு சிந்தியா கூறியும், கோடீஸ்வரன் பலவிதமான காரணங்களை சொல்லி தொடர்ச்சியாக தவிர்த்து வந்துள்ளார்.

கோடீஸ்வரன் எப்போதும் செல்போனில் சாட்டிங் செய்தபடியே இருப்பாராம். அப்போது அவர்  அருகில் வந்தால் உடனடியாக செல்போனை அணைத்து வைத்துவிட்டு, கவனத்தை திசை திருப்பும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒருமுறை  கோடீஸ்வரனின் செல்போனை  சிந்தியா பார்த்தபோது, அதில்  கோடீஸ்வரன் பல பெண்களோடு நெருக்கமாக இருக்கும் ஆபாசமான புகைப்படங்கள் இருந்தது. பல பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிந்தியா அது குறித்து  கேட்ட போது, அந்த புகைப்படத்தை வைத்து மிரட்டி பணத்தை வாங்கி ஜாலியாக செலவு செய்ததாக கோடீஸ்வரன் ஒப்பு கொண்டுள்ளார்.

அதே போலதான் சிந்தியாவிடமும் பழகியதாகவும், ஆனால் திருமணத்திற்கு முன்பு உடலுறவுக்கு சம்மதிக்கவில்லை என்பதால், ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும்,  சிந்தியா டாக்டருடன் நெருக்கமாக இருக்கும்  புகைப்படம், வீடியோவும் தன்னிடம் உள்ளதாகவும், இதுகுறித்து ஏதேனும் வெளியே சொன்னாலோ அல்லது புகார் கொடுத்தாலோ  அதனை அந்த போட்டோ, வீடியோக்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு சிந்தியாவை அசிங்கப்படுத்திவிடுவதாக மிரட்டியுள்ளார்.

திருமணம் நடந்த விசயத்தை அவரது பெற்றோரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டிவிட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சிந்தியாவை திருமணம் செய்து கொண்டதை மறைத்துவிட்டு, வசதியான மற்றொரு பெண்ணை பார்த்து மருத்துவர் கோடீஸ்வரன் குடும்பத்தார் துணையுடன் இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி செய்து வந்துள்ளார்.

இது குறித்து  சிந்தியா, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோடீஸ்வரன் மீது  தகுந்த ஆதாரங்களுடன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து  டாக்டர் கோடீஸ்வரனை  கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *