திருச்சி, ஸ்ரீரங்கம் வித்தியாலயா சாலை கணபதி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி வசந்தி (62 ). இவர் இரவு 8 மணி அளவில் அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது 2 மர்மநபர்கள் டூவிலரில் அவரது அருகாமையில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு எஸ்பேக் ஆகிவிட்டனர். அந்த செயின் ரூ. 100 மட்டுமே. கவரிங் செயின் என்பதால் வசந்தி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பின்னர் இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் தங்கம் என நினைத்து கவரிங் நகையை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது