ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூர் நோக்கி செந்துறை மார்க்கமாக தனியார் பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. சாலையின் விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஓட்டுநர் செல்போன் சார்ஜ் போடுவதற்காக குனிந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை விரிவாக்கத்திற்காக சாலையின் ஓரத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை அரியலூர் அரசு
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காலை நேரம் என்பதால் பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அரசு பணியாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பயணித்திருந்த நிலையில் விபத்து நடந்துள்ளது . அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.