தமிழ்நாடு அரசு போதையில்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போதை தடுப்பு , விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதை விழிப்புணர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோக்களையும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார்.
தற்போது, போதையில்லா தமிழ்நாடு என்ற தமிழக அரசின் நோக்கத்தை செல்போன் வாயிலாக பலருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அதற்கான போட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, “போதையில்லா தமிழ்நாடு” எனும் கூற்றை அடிப்படையாகக் கொண்டு மீம்ஸ், போஸ்டர்ஸ், ரீல்ஸ் ஆகியவற்றை தயார் செய்து அனுப்ப கோரியுள்ளது.
இந்த விழிப்புணர்வு பதிவுகளை வரும் நவம்பர் 15ஆம் தேகிக்குள் tndiprmediahub@gmail.com என்ற தளத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெரும் நபர்களுக்கு தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.ப.சாமிநாதன் பாராட்டு சான்றிதழ் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது