Skip to content

திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்… ….தஞ்சையில் உதயநிதி பேச்சு.

  • by Authour

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே பூதலூர் வடக்கு ஒன்றிய  திமுக செயலாளர் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் தமிழக துணை முதல்வர் உதயநிதி  கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.  மணமக்களை வாழ்த்தி உதயநிதி பேசியதாவது:

திமுகவை அழிப்பேன் என்று இன்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள். அதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்கள் அதற்கான பதிலடி கொடுப்பார்கள். திமுக தொண்டர்கள் சந்தோஷமாக – உற்சாகமாக இருக்கின்றார்கள். இந்த உற்சாகம்தான் எதிரணியினருக்கு மிகுந்த எரிச்சலை தருகிறது. தமிழக முதல்வர் தலைமையில் நாம் தருகின்ற தொடர் வெற்றி தான் அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலைத் தருகின்றது.

பல்வேறு அணிகளாக பிரிந்து கிடைக்கும் அதிமுகவும் – யாருமே சீண்டாத பாஜகவும் எப்படியாவது திமுகவில் ஒரு விரிசல் விழுந்துடாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள். ஆக நாம் நம்முடைய பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் ஒன்றரை வருடங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. தலைவர் 200 தொகுதியில் நாம் வெற்றி பெற வேண்டும் என இலக்கு கொடுத்துள்ளார்.

இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றுபட்டு  உழைக்க வேண்டும். 2026 ல் கழகம் மீண்டும் ஆட்சி அமைத்து, தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனார், திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைத்தது என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும் அதற்கான உறுதியை தஞ்சையில் இன்று அனைவரும் ஏற்க வேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!