திருச்சியில் கடந்த 27.09.2022-ந்தேதி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த நபர் தூங்கி கொண்டிருந்த சிறுமியின் அம்மாவை வாயை பொத்தியும் கை, கால்களை கட்டிபோட்டு, அவர் அணிந்திருந்த 1/4 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டும், பக்கத்து அறையில் இருந்த 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த முகமது உசேன் வயது 33, த/பெ.முகமது முஸ்தபா என்பவரை கைது செய்து, கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளியான முகமது உசேன் மீது கடந்த 24.11.2022-ந்தேதி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் நீதிமன்ற விசாரணையை முடித்து, நேற்று குற்றவாளிக்கு ஆயுள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் செல்வி.சுமதி ஆஜராகி வழக்கு நடத்தி வாதாடினார்கள். இவ்வழக்கில் உரிய காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர கமிஷனர் காமினி வெகுவாக பாரட்டினார்கள்.